கவுதமி மகள் கதாநாயகியாக நடிக்கப் போவதாக பரபரப்பு தகவல் !

கவுதமி மகள் கதாநாயகியாக நடிக்கப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் உள்ளிட்ட திரையுலகினரின் வாரிசுகள் சினிமாவுக்கு வருவது சகஜமாகி விட்டது. விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் முன்னணி வாரிசு நடிகர்களாக உள்ளனர். சிபிராஜ், விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக் போன்றோரும் இளம் நடிகர்களாக வலம் வருகிறார்கள். 
ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா டைரக்டர்களாகியுள்ளனர். கமல் மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் பிசியான கதாநாயகியுள்ளார். அவரது இரண்டாவது மகள் அக்ஷராஹாசனும் நாயகியுள்ளார். ஷமிதாப் இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். முன்னாள் கதாநாயகி ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி இருவரும் கதாநாயகிகளாகியுள்ளனர். இந்த வரிசையில் கவுதமி மகள் சுப்புலட்சுமியும் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

சுப்புலட்சுமிக்கு 16 வயது ஆகிறது. நடனம் கற்று சினிமாவுக்கு தயாராகி இருக்கிறாராம். பொது விழாக்களுக்கு சுப்புலட்சுமியை கவுதமி அழைத்து வருகிறார். அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் சிலர் ஆர்வம் காட்டுகிறார்களாம். சுப்புலட்சுமி விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார் என எதிர் பார்க்கப்படுகிறது.