போதையில் கலாட்டா செய்த 'கடைத் தெரு' நடிகை...

தமிழ் சினிமாவில் நல்ல நடிகை என பெயரெடுத்து அடுத்த சாவித்ரி என்று சொல்லுமளவிற்கு உயர்ந்த நடிகை அவர். முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கவில்லை என்றால் கூட குறுகிய காலத்திலேயே நல்ல பெயரெடுத்தவர் அந்த நான்கெழுத்து பெயரைக் கொண்ட நடிகை. 'கடைத் தெரு' படத்தின் வெற்றிதான் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்து புகழ் பெற வைத்தது. தொடர்ந்து, இரண்டெழுத்து வெற்றிகரமான நடிகர் நடித்த மிகப் பெரிய இயக்குனர் நடித்த படத்திலும் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருடைய சித்தியால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சென்னையை விட்டுப் புறப்பட்டு ஹைதராபாத்தில் தஞ்சமடைந்தார். சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் உள்ள 'பப்' ஒன்றுக்கு தோழிகளுடன் குடிப்பதற்காகப் போயிருக்கிறார். போதையில் தோழிகளுடன் நடனமாட வேறு ஒரு இடத்திற்குப் போகும் போது வழியில் யாரோ அவரை தெரியாமல் மோதி விட, கெட்டக் கெட்ட வார்த்தைகளால் அவரிடம் சண்டை போட்டிருக்கிறார். அந்த சண்டை ஒரு கட்டத்தில் அதிகமாக பின்னர் போலீசை வரவழைத்திருக்கிறார்கள். அதன் பின்தான் சண்டை ஓய்ந்ததாம். ஆனால், நான்கெழுத்து நடிகை மீது ஏதாவது வழக்கு பதிவு செய்தார்களா என்பதுதான் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.