கே.பி குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்தவரும் அவ்வியக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என்று கூறப்பட்டவருமான குமரன் பத்மநாதனை( கே.பி) கைது செய்வதா அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மக்கள் விடுதலை முன்னணியின் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று செவ்வாய்க்கிழமை ஆராய்ந்த போதே நீதியசர்கள் குழாம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த மனு, மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவினால் ஆராயப்பட்டதுடன் அந்த உத்தரவு சட்டமா அதிபருக்கே பிறப்பிக்கப்பட்டுள்ளது.