எமி ஜாக்சனின் ஆசை நிறைவேறுமா?

விஜய் இயக்கிய மதாராசப்பட்டணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். அதன் பிறகு தாண்டவம் படத்தில் அவர் நடித்தாலும், அப்படம் அவருக்கு நன்மை சேர்க்கவில்லை. அடுத்து அவர் கமிட்டான ஷங்கரின் ஐ படம் தற்போது வெளியாகி, அப்படத்தின் மூலம் இந்திய அளவில் மேலும் புகழ் அடைந்துள்ளார் எமி ஜாக்சன். 

ஐ படத்தினால் எமிக்கு ரசிகர்கள் அதிகரிப்பார்கள் என்பதை சரியாய் கணித்து தன்னுடைய அடுத்தப்படமான கெத்துவில் எமியை தனக்கு ஜோடியாக்கி உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
தற்போது கெத்து என்ற படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன் மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். மதராசப்பட்டணம் படத்தில் நடிப்பதற்கு முன் மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தவர் எமி. மாடலிங்கிலிருந்து சினிமாவுக்கு வந்த எமி ஜாக்சன் ஸ்போர்ட்ஸிலும் மிக ஈடுபாடு கொண்டவராம்! எமிக்கு மிகவும் பிடித்த ஸ்போர்ட்ஸ்... கிக் பாக்சிங்! இப்போதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கிக் பாக்சிங்கில் பயிற்சி பெற்று வருகிறார் எமி ஜாக்சன். கிக் பாக்சிங்கில் ஆர்வம் கொண்ட எமி ஜாக்சனுக்கு அது சம்பந்தப்பட்ட ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாம்.
கதாநாயகி இப்படி எல்லாம் ஆசைப்படலாமா? நீங்கள் கதாநாயகன் உடன் டூயட் பாட படைக்கப்பட்டவர்களாச்சே...!