எரிபொருள் விலைச்சூத்திரம் அறிமுகம்

அடுத்த மாதம் (பெப்ரவரி) முதல், பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களுக்கான விலைச் சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது என மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

 உலக சந்தையில், மசகெண்ணெயின் விலை 50 டொலர்களாக குறைந்துள்ள நிலையில், வெகு விரைவில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். உலக சந்தையில் மசகெண்ணெயின் விலையேற்றம் மற்றும் விலைக்குறைப்பு ஆகியவற்றை ஈடுசெய்யும் வகையிலும் எரிபொருளின் விலையை பொதுமக்கள் சுமக்காத வகையிலும் இந்த புதிய விலைச் சூத்திரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.