ஊக்க மருந்து சர்ச்சை; குசல் ஜனித் பெரேரா குற்றவாளி?


இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் ஜனித் பெரேரா, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தினாரா என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பீ மாதிரி சோதனையில் நிருபிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கல் தெரிவிக்கின்றன. 

முன்னதாக தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக குசல் ஜனித் பெரேரா மீது குற்றம் சுமத்தப்பட்டு நியூஸிலாந்து தொடரில் இருந்து அவர் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார். 

பின்னர் அவரின் சிறுநீரை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தி பீ மாதிரி சோதனையின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபனமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கட் அல்லது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலோ இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கவில்லை