சவூதி அரேபியாவிடம் இலங்கை விஷேட வேண்டுகோள்


இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைப்பதற்கு முன்வருமாறு சவூதி அரசாங்கத்திடம் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது. 

சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் நிதி நிறுவன பிரதாணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளதாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்டிய பகுதியில் குறித்த ஆலையை அமைக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பிரதான விநியோக மையமாக இணைத்துக் கொள்ளும் நோக்கிலேயே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுடன் மேலும் அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளதுடன் இலங்கையை பாதிக்கும் காரணிகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.