கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியில், கல்வடுவாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
திரிப்பனேயில் இருந்து கல்வடுவாகம நோக்கி சென்ற மோட்டார் வாகனம் ஒன்று, அந்தப் பாதையால் நடந்து சென்று கொண்டிருந்த இரு பெண்கள் மீது நேற்று மாலை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த இரு பெண்களும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
கல்வடுவாகம பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 50 மற்றும் 62 வயதுடைய இரு பெண்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மோட்டார் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திரிப்பனே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.