மன்னார் - சின்னக்கடை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை இன்று காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த பகுதியைச் சேர்ந்த பி.யூட் கோடிஸ்வரன் (48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் வெளி நாட்டில் இருப்பதாகவும் குறித்த நபரும் வெளி நாட்டில் இருந்து கடந்த 8 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து மன்னாரில் வசித்து வருவதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

பொலிஸ் நாயின் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு விசேட பொலிஸ் தடவியல் நிபுனர்களும் வருகை தந்து தடயங்களை சோதனையிட்டுள்ளனர்.
மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா இன்று காலை 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனையினை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.