உள்ளாடைக்குள் மறைத்து வைத்து போதைப் பொருள் கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம பெரகும்மாவத்தையை சேர்ந்த 48 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் 100 போதைப் பொருள் பக்கற்றுகளை இந்தப் பெண் தன் வசம் வைத்திருந்ததாகவும் பெண் பொலிஸ் அதிகாரிகளே குறித்த சந்தேக நபரை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய இந்தப் பெண், போதை வர்த்தக வலையமைப்போடு தொடர்புடையவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இவரை கங்கொடவிலை நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.