தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசும், அரசியல் கட்சியினரும், ஜல்லிக்கட்டு பேரவை உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் தொடர்ந்து வலியுறுத்தினர்.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாத நிலையில், அவசர சட்டம் பிறப்பித்தாவது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில்,