எம்பிலிபிட்டிய பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டு காயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
29 வயதுடைய வெதா என்றழைக்கப்படும் சுமித் என்பவரே இவ்வாறு இன்று காலை உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட ஒரு பிள்ளையின் தந்தையான இவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவிக்கும் போது, தனது கணவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டிருந்ததாக தெரிவித்திருந்தார்