யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட காணிகளை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று வழங்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதனினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த காணிகளை விடுவிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் முகாம்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும், அவர்களை மீள்குடியமர்த்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுவதாகவும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் பிரகாரமே இந்த காணிகள் விடுவிக்கப்படுகின்றன.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையிலான காணிகள் விடுவிக்கப்படுவதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வழங்கப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.