இலங்கையிலிருந்து டெங்கு நோயை கொண்டு சென்ற கொரிய நாட்டு பிரஜைகள்


இலங்கைக்கு தன்னார்வ பணிகளுக்காக வருகை தந்த கொரிய நாட்டுப் பிரஜைகள் அறுவருக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 23-31ம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கொழும்புக்கு வருகை தந்த கொரிய பிரஜைகளே டெங்கு நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதன்போது 35 பேர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

இலங்கையிலிருந்து மீண்டும் நாடு திரும்பிய அவர்களில் அறுவருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

மேலும் இருவருக்கு டெங்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதனால், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கைகள் வரும் வரை காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய 27 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கு டெங்கு தொற்றி இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட கொரியப் பிரஜைகளுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவென்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.