பதினைந்து வயது பாடசாலை மாணவியுடன் தம்பதி உறவை மேற்கொண்ட 21 வயதான நபரை தேடி, பொத்தல காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மாணவி ஒருவருட காலமாக துஷ்பிரேயோகத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவி சில காலமாக தனது, நண்பியின் உறவினர் ஒருவருடன் காதலில் ஈடுபட்டுள்ளார். இரவு நேரங்களில் தனது பெற்றோருக்கு தெரியாமல் இந்த உறவை மாணவி மேற்கொண்டுள்ளார். தற்போது மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்தல காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.