தமிழகத்தில் பள்ளி மாணவனுடன் மாயமான ஆசிரியையை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை பொலிசார் புதுவையில் முகாமிட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் சந்திரகுமார், இவரது மகன் சிவசுந்தரபாண்டியன் தென்காசியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதே பள்ளியில் வேலை பார்த்த பிரியா என்ற ஆசிரியருக்கும், இவருக்கும் காதல் மலர்ந்தது.
இதனையடுத்து கடந்தாண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இருவரும் மாயமாகினர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கடையநல்லூர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் பிரியாவும், சிவசுந்தரபாண்டியனும் புதுவை மாநிலம் திருபுவனையை அடுத்த கலிதீர்த்தாள் குப்பத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது.
மேலும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிரியா ஆசிரியையாக வேலை செய்ததையும், சிவசுந்தரபாண்டியன், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்ததையும் அறிந்தனர்.
உடனே புதுவைக்கு பொலிசார் தேடி வந்தனர். அவர்கள் தேடி வந்து விட்டனர் என்பதை அறிந்தவுடன் பிரியாவும், சிவசுந்தரபாண்டியனும் வீட்டை காலி செய்து தப்பி சென்று விட்டனர். பொலிசார் தொடர்ந்து பல இடங்களில் தேடியும் அவர்கள் 2 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் சிவசுந்தரபாண்டியனின் தாயார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி, சிறப்பு படை அமைத்து மாயமான நபர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து துணை பொலிஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சிபின்ராஜ்மோன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,
இவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புதுவை சென்று முகாமிட்டுள்ளனர்.
மேலும் புதுவை பொலிசாருடன் இணைந்து இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர், இவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கவும் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.