இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அச்சத்தில் தயாரிப்பாளர்


சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது நயன்தாராவிற்கு. ஆனால், இன்றும் அவருக்கான ஈர்ப்பு ரசிகர்களிடம் துளி அளவும் கூட குறையவில்லை.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற இடத்திற்கு வந்துவிட்டார்.

 இவர் நடிக்கும் படங்களுக்கு குறைந்தது ரூ 2 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகின்றது.சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தில் இவரை கமிட் செய்ய பிரபல தயாரிப்பாளர் வர, அவரிடம் தன் சம்பளம் ரூ 4 கோடி என நயன்தாரா கூற, அவர் அச்சத்தில் உறைந்தே போய்விட்டாராம்.