தாய்வான் நிலநடுக்கத்தில் 4 பேர் பலி

தாய்வான் நாட்டின் தென்பகுதியில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை வெளிவந்த தகவலின்படி நால்வர் பலியாகியுள்ளனர். 

 அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. தாய்வானின் இரண்டாவது பெரிய நகரமான காவோசியுங் நகரில் இருந்து சுமார் 39 கிலோமீட்டர் தொலைவில் பூமியின் அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் 16 தளங்களை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உட்பட நான்கு கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. அத்துடன், இன்னொரு ஏழு மாடி கட்டடத்தில் சிக்கியிருந்த சுமார் 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், 

அவர்களில் காயமடைந்த நூற்றுக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1999ஆம் ஆண்டு தாய்வானை தாக்கிய 7.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 2,400 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.