இலங்கையில் வெளிநாட்டுப் பெண்னை தங்கிமிடத்தை காட்டுவதாக கூட்டி வந்து பாலியல் வேட்கை!

காலி - தனிபோல்கஹ பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 25 வயதான கனேடியப் பிரஜை ஒருவரே அண்மையில் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் குறித்த பெண்ணிடம் பாதுகாப்பான  தேடித்தருவதாக கூறியே, சம்பந்தப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண் இந்த விடயம் தொடர்பில் காலி துறைமுகப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து 27 வயதான குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு இன்று காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.