யசாரா அபேயநாயக்கவையும் கைது செய்ய திட்டம்?

சீ.எஸ்.என். தொலைக்காட்சியில் இடம்பெற்ற பாரியளவிலான பணமோசடி சட்டமூலத்திற்கு அமைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் உயர் பதவிகளை வகித்த ரொஹான் வெளிவிட்ட, கெளஷான் திசாநாயக்க, ரவினாத் ப்ரனாந்து மற்றும் நிஷாந்த ரணதுங்க உள்ளிட்டோரை கைது செய்தது, யோஷிதவின் மோசடிகளுக்கு துணை போனதற்காக எழுந்த குற்றச்சாட்டுக்களின் பெயரிலேயே ஆகும். 

 இவ்வாறிருக்க, சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் முன்னணி தலைமை பதவியொன்றை வகித்த யசாரா அபேயநாயக்க அவர்களையும் கைது செய்வதற்காக நிதி மோசடி குற்ற பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரபல ஆங்கில பத்திரகையான சண்டே டைம்ஸ் (sunday times) செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், யசாரா தற்போது நாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.