பஸ்களின் ஊடாக பெறப்படும் வருமானத்திற்கு ஏற்ப நடைமுறையிலுள்ள 10,000 ரூபா தண்டப்பணம் போதுமானதல்ல என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ..ஹேமச்சந்திர தெரிவித்தார்.
நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைய போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு 10,000 ரூபா தண்டப்பணம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனையே அமுலிலுள்ளது.
எனினும் போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் சில பஸ்களின் வருமானத்துடன் ஒப்பிடும் போது இந்த தண்டப் பணம் போதுமானதல்ல எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக விதிக்கப்படும் தண்டப்பணத்தினை இரண்டு இலட்சம் ரூபாவாகவும், சிறைத்தண்டனை காலத்தினை 10 வருடங்களாகவும் அதிகரிப்பதற்கான சட்டத்திருத்திற்கு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு பூராகாவும் அதிகளவான பஸ்கள் போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி மகாணங்களுக்குள்ளும்,வெளியிடங்களுக்கும் சேவையிலீடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.
போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி சேவையிலீடுபடும் பஸ்களை அடையாளம் காண்பதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.