பிரித்தானியா நாட்டில் 7 மாத கர்ப்பிணி தாயாரின் கருவறையில் இருந்த ஆண் குழந்தை ஒன்று திடீரென தாயாரை நோக்கி இரு விரல்களை நீட்டி சிக்னல் கொடுத்த சம்பவம் பெற்றோர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோல் நகரில் ஐய்மி ஃபோர்ட்(24) என்ற பெண்மணி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.
ஆனால், ஐய்மி கர்ப்பம் தரித்து 7 மாதம் ஆன பிறகும் வயிறு பெருத்து காணப்படாததால் அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ள தீர்மானித்தார்.
இதனை தொடர்ந்து ‘4D Scan’ எனப்படும் அதிநவீன பரிசோதனை மூலம், வயிற்றில் உள்ள குழந்தையை நன்றாக பார்க்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு சம்மதம் தெரிவித்த தாயார், அதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டு ஸ்கேன் எடுக்கும் அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது, தாயின் வயிற்றை ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தபோது, கருவறையில் இருந்த அந்த ஆண் குழந்தை தனது இரு விரல்களை தாயை நோக்கி உயர்த்தி காட்டி ஏதோ ஒரு சிக்னலை காட்டுவது போல் காட்சியளித்துள்ளது.
இதனை பார்த்து மருத்துவர்களும் பெற்றோர்களும் ஒரு கணம் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பின்னர், குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து வருவதாகவும், அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை என மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து பெற்றோர் வீடு திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து தனது நினைவுகளை தாயார் பத்திரிகை ஒன்றிற்கு பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது தாயார் பேசியபோது, ‘கணிணி வழியாக இந்த காட்சியை கண்டபோது அதிர்ச்சியாக இருந்தாலும், பின்னர் அது இயல்பாக சில கருவறை குழந்தைகள் காட்டும் செய்கைகள் தான்’ என மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.
கடந்த நவம்பர் மாதம் அந்த குழந்தை பிறந்ததாகவும், அதற்கு Edward Worlock எனப் பெயர் சூட்டியுள்ளதாக தாயார் கூறியுள்ளார்.
அதேசமயம், தனது 4 வயது மூத்த மகனை விட இந்த குழந்தை மிகவும் சுறுசுறுப்பாகவும், சுட்டித்தனம் அதிகம் செய்வதாகவும் அவர் வியப்புடன் தெரிவித்துள்ளார்.