அமைச்சர் பி.வி.ரமணா பெண் ஒருவருடன் !! பதவி பறிக்கப்பட்டுள்ளது

புகைப்பட சர்ச்சையில் சிக்கிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

 சமீபத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா பெண் ஒருவருடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது் இந்நிலையில் அவர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், பால்வளத்துறையை அமைச்சர் மோகன் கூடுதலாக கவனிப்பார் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், திருவள்ளுர் மேற்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் ரமணா நீக்கப்பட்டுள்ளார். 

 புதிதாக பொறுப்பாளர் நியமிக்கப்படும் வரை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் அதை கவனித்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.