கவர்ச்சி நடிகை மீது கணவன் கொடுமை - உடல் முழுக்க தழும்புகள்...

பிரபல நடிகை ரதியின் கணவர் அனில் விர்வானி தங்களுக்குள் உள்ள பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள விரும்புகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்டோருடன் நடித்தவர் ரதி அக்னிஹோத்ரி. 

பாலிவுட் பக்கம் சென்றவர் தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார். ரதியின் மகன் தனுஜ் விர்வானி இந்தி படங்களில் நடித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி ரதி மும்பை போலீஸ் கமிஷனரிடம் தனது கணவர் அனில் மீது புகார் அளித்தார். அனில் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்த ரதி தனது உடலில் இருந்த காயங்களையும் காண்பித்தார். 

ஏப்ரல் 29ம் தேதி ரதி மீண்டும் தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். அனில் தன்னை கத்தியைக் காட்டி மிரட்டியதாக ரதி தெரிவித்தார். இதையடுத்து அனில் முன்ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அனிலை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் அவரின் மனு குறித்த விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

 ரதி தன் மீது அளித்துள்ள புகார் குறித்து நீதிமன்றத்திற்கு வெளியே பேசி சுமூகத் தீர்வு காண விரும்புவதாக அனில் விர்வானி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.அனில் தன்னை பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவர் இன்று திருந்திவிடுவார், நாளை திருந்திவிடுவார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்ததாகவும் ரதி முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது