சிறுமியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இருவர் யாழில் சிக்கினர்

யாழ்ப்­பாணம் கொட்­டடி பகு­தியில் பத்து வயது சிறு­மி­யொ­ரு­வரை பாலியல் துஷ்பி­ர­யோகம் செய்ய முயன்ற இரு­வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொட்டடி குளியாவடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை சிறுமியொருவர் புலமைப்பரிசில் பரீட்சைக்காக தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். இதன் போது இருவர் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து தமது அறைக்கு கூட்டிச் சென்று சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளனர். 

 இதனையடுத்து சிறுமி அச்சமடைந்து அழுதவாறு வெளியே ஒடி வர முற்பட்ட போது சிறுமிக்கு 70ரூபா பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். இதன் பின்னர் அவ்விடத்திற்கு சிறுமியின் பெற்றோர் சென்று பார்த்த போது இருவரும் வீட்டினுள் மறைந்திருந்துள்ளனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நபர்கள் இரு­வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உணவு விடுதியொன்றை நடாத்திவரும் ஜேர்மன் பிரஜாவுரிமை உடையவர் என்றும் மற்றையவர் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும்தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தின் போது இவர்கள் இரு­வரும் மது போதையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.