புதிய அரசியலமைப்புத் திருத்தம் மூலமாக மலையக மக்கள் தமது அடையாளங்களையும் அந்தஸ்தையும் உறுத்திப்படுத்துமாறு கோருகிறார்களே தவிர, வடக்கு கிழக்க மக்களைப் போன்று சமஷ்டி அதிகாரத்தையோ அல்லது முஸ்லிம்களைப் போன்ற தனி அலகையோ கோரவில்லை என்று கல்வி இராஜங்க அமைச்சர் வீ. இராதகிருஸ்ணன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கிரான் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழாவில், நேற்று புதன்கிழமை (03) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார் வித்தியாலய அதிபர் ம.சிவசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.ரி.எம்நிஸாம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீ கிருஸ்ணராஜா உட்பட பலர கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்து உiராற்றுகையில், 'யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வடக்கு, கிழக்கு பகுதிகளில் சுதந்திரமாகப் பேச முடியாத நிலை காணப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் இறுதி 5 வருடங்கள், இந்நாட்டு மக்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை. தற்போது நாட்டில் முழுமையான அரசியல் யாப்பு திருத்தம் மேற்கொள்ள முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.
யாப்பு மாற்றத்துக்கு இந்நாட்டு மக்களின் கருத்துக்களுக்கும் இடமளிக்கபட்டுள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு பிரதேச மக்களும் அரசியில் யாப்புத் திருத்துக்கான அபிப்பிராயங்களை முன்வைக்க முடியும். குறிப்பாக, மலையக மக்கள் நூற்றாண்டு காலமாக அனைத்து விடயங்களிலும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
நாட்டிலுள்ள ஏனைய பகுதிகளில் 500 மற்றும் 1000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான மக்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு இருக்கும் நிலையில், மலையகத்தில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு காணப்படுகிறது' என்று அவர் கூறினார்