அவுஸ்திரேலியாவில் கணவனைக் கொன்ற இலங்கை பெண் நாடு கடத்தப்படும் சாத்தியம்

அவுஸ்திரேலியாவில் தனது கணவரை கொலை செய்த இலங்கை பெண் ஒருவர் நாடு கடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஷாமரி லியனகே என்ற பெண்ணால் கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அவரது கணவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கணவரால் நீண்டகாலமாக பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான நிலையில் அவரை கொலை செய்ததாக பெண் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 4 ஆண்டு கால சிறை தண்டனை விதித்தது. இந்த நிலையில் அவர் ஏற்கனவே சிறையில் இருந்த காலம் என்பவற்றை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜுலை மாதம் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இதன்பின்னர் அவர் நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, அவரது சட்டத்தரணி கூறியுள்ளார். குறித்த பெண்ணின் கணவருக்கு வெறொரு பெண்ணுடன் இருந்த தொடர்பு மற்றும் அதன் விளைவால் ஏற்பட்ட சில சிக்கல்களே கொலை வரை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.