குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஒரே காரணத்துக்காக தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
'எனக்கு நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஒரே காரணத்துக்காகதான் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்டால் அதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாது.
அதனால் நான் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெறுவேன். வைரங்கள், பணத்துக்காக நான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன். நான் காதலித்து தான் திருமணம் செய்வேன். குழந்தை பெறும் காரணத்தை தவிர வேறு எதற்காகவும் என் வாழ்வில் ஆண் தேவை இல்லை' என்கிறார் பிரியங்கா.