சொர்ப்ப ஆசைக்கு பனியாத மனைவியை பதம்பார்த்த கணவன்

மார்த்தாண்டத்தை அடுத்த காஞ்சிரக்கோடு குழி விளையைச் சேர்ந்தவர் முத்துமணி. இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 25). இவருக்கும் அழகியமண்டபத்தை அடுத்த கூட்டமாவு,

 பாம்பு தூக்கி விளையைச் சேர்ந்த பிரபு (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16–ந்தேதி திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் 70 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் மாப்பிள்ளைக்கு 9 பவுன் செயின், 2 பவுன் கைச்செயின் மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக வழங்கினர். திருமணத்திற்கு பிறகு கிருஷ்ணவேணி, கூட்டமாவு பாம்பு தூக்கி விளையில் உள்ள கணவன் வீட்டிலேயே வசித்தார். இனிமையாக சென்ற இல்லற வாழ்க்கையால் கிருஷ்ணவேணி 3 மாத கர்ப்பிணியானார்.

 இந்த நிலையில் திடீரென இவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் மூண்டது. பிரபு–கிருஷ்ணவேணி இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை கிருஷ்ணவேணி, பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் ஆறுதல் கூறி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபுவின் உறவினர் ஒருவருக்கு இரணியல் பகுதியில் திருமணம் நடந்தது. 

இதில் பங்கேற்க பிரபுவும், கிருஷ்ணவேணியும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அன்று மாலை திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினர். அப்போது கிருஷ்ணவேணி இரணியலை அடுத்த அரசமூட்டு குளத்தில் தவறி விழுந்து இறந்து விட்டதாக கிருஷ்ணவேணியின் பெற்றோருக்கு பிரபு தகவல் தெரிவித்தார். மேலும் இரணியல் போலீசிலும் புகார் செய்தார். அதில், மோட்டார் சைக்கிளில் வந்தபோது நிலை தடுமாறி குளத்தில் விழுந்து விட்டதாகவும், இதில் கிருஷ்ணவேணி நீரில் மூழ்கி இறந்து போனதாகவும் கூறினார்.

 நீச்சல் தெரியும் என்பதால் தான் மட்டும் தப்பி விட்டதாக தெரிவித்தார். போலீசார் கிருஷ்ணவேணியின் பிணத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கிருஷ்ணவேணியின் குடும்பத்தார் அவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறினர். பிரபுவுக்கும், கிருஷ்ணவேணிக்கும் இடையே பிரச்சனை இருந்ததாகவும், இதில் கிருஷ்ணவேணியை குளத்தில் தள்ளி பிரபு கொலை செய்திருக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டினர்.

 இது தொடர்பாக இரணியல் போலீசார் கிருஷ்ணவேணியின் மரணத்தை சந்தேக சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அவரது கணவர் பிரபுவையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் கிருஷ்ணவேணியின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியானது. அதில், அதிகளவு தண்ணீர் குடித்ததால் கிருஷ்ணவேணி இறந்திருப்பது தெரிய வந்தது. யாரோ அவரை நீரில் மூழ்கடித்து கொன்றிருக்கலாம்

 என்றும் கூறப்பட்டிருந்தது. கிருஷ்ணவேணிக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆகி இருந்ததால் ஆர்.டி.ஓ.வும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். போலீசார் ஒருபுறம், ஆர்.டி.ஓ. மறுபுறம் என நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், கிருஷ்ணவேணியை குளத்தில் தள்ளி கொலை செய்ததை பிரபு ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:– திருமணம் முடிந்த சில வாரங்கள் வரை நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். அதன் பிறகு எங்கள் இருவருக்கும் இடையே சின்ன சின்ன பிரச்சனைகளிலும் தகராறு மூண்டது. 

கிருஷ்ணவேணி என்னை எதற்கெடுத்தாலும் ஏளனம் செய்தார். இதை என்னால் தாங்க முடியவில்லை. அவரை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. எனவே நேரம் பார்த்து தீர்த்துக்கட்டி விட முடிவு செய்தேன். அதற்கான காலம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைக்கூடியது. இருவரும் திருமண வீட்டிற்கு சென்று திரும்பும்போது, அந்த சந்தர்ப்பம் வாய்த்தது. இரணியல் குளக்கரை அருகே வந்தபோது கிருஷ்ணவேணி நீச்சல் தெரியாது என்றார். 

அதையே சாதகமாக்கி அவரை குளத்தில் தள்ளினேன். அவர் நீரில் மூழ்கி தத்தளித்ததை நான் கண்டு கொள்ளவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர் நீரில் மூழ்கி இறந்த பின்பு போலீசாருக்கும், கிருஷ்ணவேணியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தேன். இந்த சம்பவத்தை விபத்து என நாடகமாடி தப்பித்து விட எண்ணினேன். ஆனால் போலீசாரும், அதிகாரிகளும் நடத்திய விசாரணையில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் பிரபுவை கைது செய்தனர். 

கிருஷ்ணவேணி மரணம் குறித்து முதலில் பதிவு செய்யப்பட்ட சந்தேக சாவு என்ற வழக்கு திருத்தப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பிரபு மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.