பல்கலைக்கழக பேஷன் ஷோவில் நடந்த விபரீதம் (வீடியோ இணைப்பு)

டெல்லி பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற பேஷன் ஷோவில் மின்கம்பம் சரிந்து விழுந்ததில் வணிகவியல் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

 டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேஷ் பந்து கல்லூரியில் இன்று பேஷன் ஷோ நடைபெற்றது. இதில், மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர், அப்போது, மேடையில் மாணவர்கள் நடந்து வருகையில், மின்கம்பம் ஒன்று வணிகவியல் படிக்கும் மாணவரின் மீது விழுந்துள்ளது.

 இதில், அவரது முகம் மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது, மே
டையில் இருந்த பிற மாணவர்கள் தப்பியுள்ளனர். தற்போது, அந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.