யாழில் பாலியல் ஆசையால் காதலியால் கடத்தப்பட்ட காதலன் ( கரியுகம் ஆரம்பம் படம்கள் உள்ளே)

யாழ்ப்பாணம் பளைப் பகுதியில் அரசர்கேணி பளைப் பகுதியைச் சேர்ந்த பளை மத்தியகல்லுாரியில் கல்விபயிலும் 19 வயது மாணவன் என்பவரை மாணவியும் மாணவியின் தந்தையாரும் கடந்த மாதம் 27ம் திகதி கடத்திச் சென்றுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் பளைப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். 

மாணவின்ன விருப்பத்திற்கு மாறாக மாணவனை மாணவியும் தந்தையும் ஹயஸ் வாகனத்தில் கடத்திச் சென்றதை நேரில் அவதானித்த சிலர் மாணவனின் பெற்றோருக்கு இது தொடர்பாக அறித்துள்ளனர். இதன் பின்னர் மாணவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் பொலிசார் எடுக்கவில்லை எனத் தெரியவருகின்றது. தனது மகன் உயிருடன் இருக்கின்றானா, 

இல்லாயா என்பது கூடத் தெரியாது மகனை இழந்து தாயார் பெரும் துன்பத்தில் இருப்பதாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பளைப் பொலிசார் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவனின் பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் உயரதிகாரிக்கு முறையிட்டதால் இந்த முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பொலிஸ் அதிகாரி பளைப் பொலிசாரைப் பணித்தார்.

 இதன் பின்னர் மாணவனையும் மாணவியையும் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை கொண்டு வந்து ஒப்படைப்பதாக கடந்த சனிக்கிழமை மாணவனின் பெற்றோருக்கு பொலிசார் தெரிவித்திருந்தனர். ஆனால் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை அவர்கள் மாணவனைக் கொண்டு வரவில்லை என தெரியவருகின்றது. மாணவன் உயிருடன் இருக்கின்றானா? மாணவனை இவர்கள் வசியப்படுத்தி வைத்திருக்கின்றார்களா?

 என்பது தெரியாது மாணவனின் பெற்றோர் குழம்பியிருக்கின்றனர். மாணவனும் மாணவியும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் மாணவியின் தந்தைக்குப் பளைப் பொலிசார் நெருங்கிய நண்பர்கள் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் ஆண்களே பெண்களைக் கடத்திச் சென்றுள்ளது வழமையாகும். ஆனால் யாழ்ப்பாணத்தில் தற்போது பெண்கள் ஆண்களை அதுவும் தமது தந்தையுடன் சேர்ந்து கடத்திச் செல்வது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது