சென்னையில் நண்பனின் மனைவியுடன் உல்லாசம்; கையும் களவுமாக பிடித்தார் கணவன்!

தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பனையும், மனைவியையும் கையும் களவுமாக பிடித்தார் கணவன். 

போலீஸாரிடம் கொண்டு போய் அவர்களை நிறுத்தியபோது, கணவன் வேண்டாம், கள்ளக்காதலனே போதும் என்று கட்டிய கணவனை உதறி விட்டார் அந்தப் பெண். சென்னை சேலையூர் அருகே உள்ள ராஜகீழ்ப்பாக்கம் சின்மயா தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி மகாலட்சுமி. இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். காதலித்து மணம் செய்து கொண்டனர். 6 மாதங்களுக்கு முன்புதான் ஒரு அழகான பெண் குழந்தை இந்த காதல் தம்பதிக்குப் பிறந்தது. 

அன்பழகன் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தி வருகிறார். மகாலட்சுமி தி.நகரில் உள்ள கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கால் சென்டரில் வேலை பார்த்து வந்த ரப்பானி என்பவருடன் மகாலட்சுமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ரப்பானி வேறு யாருமல்ல, அன்பழகனுடன் படித்தவர்தான். இவரது வீடு தாம்பரத்தில் உள்ளது. அன்பழகனின் மனைவி என்ற வகையில் முதலில் மகாலட்சுமியுடன் பழகியுள்ளார் ரப்பானி. 

ஆனால் அது போகப் போக கள்ளக் காதலாக மாறி விட்டது. இருவரும் அடிக்கடி வெளியே சுற்றியுள்ளனர். கள்ளக்காதல் எல்லை மீறி காமத்தில் முடிந்துள்ளது. இதனால் கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் ரப்பானியை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருக்க ஆரம்பித்தார் மகாலட்சுமி. 2 நாட்களுக்கு முன்பு இரவில் கொஞ்சம் வேலை இருப்பதாக கூறி அன்பழகன் வெளியே போயுள்ளார். அவர் வர லேட் ஆகும் என நினைத்த மகாலட்சுமி, ரப்பானிக்குப் போன் செய்து வருமாறு கூறியுள்ளார். 

அவரும் வேமாக விரைந்து வந்தார். வீட்டுக்குள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் வெளியில் போன அன்பழகன் சீக்கிரமாகவே வீடு திரும்பினார். கதவைத் தட்டியுள்ளார். ஆனால் மகாலட்சுமி கதவைத் திறக்கவில்லை. நெடுநேரமாகியும் மனைவி கதவைத் திறக்காததால், என்னவோ, ஏதோ என்று பயந்து போன அன்பழகன், மகாலட்சுமியின் செல்போனைத் தொடர்பு கொண்டார். அது ரிங் போய்க் கொண்டே இருந்தது. இதனால் மனைவிக்கு என்ன ஆனதோ என்ற பயம் அவருக்கு வந்தது. 

சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு கதவைத் திறந்தார் மகாலட்சுமி. கதவைத் திறக்க ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டபடி படுக்கை அறைக்குச் சென்றார். அப்போது வேகமாக படுக்கை அறைக் கதவை வெளியில் பூட்டிய மகாலட்சுமி, பக்கத்து அறையில் இருந்த பாத்ரூமில் பதுங்கியிருந்த ரப்பானியை வேகமாக வெளியேறும்படி கூறியுள்ளார். மனைவி வெளியிலிருந்தபடி கதவைப் பூட்டியதால் குழம்பிய அன்பழகன், ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்துள்ளார். 

அப்போது ஒருவர் வேகமாக காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து ஓடுவதைப் பார்த்து அதிர்ந்தார். கணவர், ரப்பானியைப் பார்த்து விட்டதை அறியாத மகாலட்சுமி படுக்கை அறைக் கதவைத் திறந்துள்ளார். வேகமாக வெளியே வந்த அன்பழகன், திருடன் திருடன் என பலமாக கத்தினார். இதனால் அந்தப் பகுதியே கூடி விட்டது. கூட்டத்தைப் பார்த்த அன்பழகன் அருகில் இருந்த புதருக்குள் பதுங்கினார். ஆனால் மக்கள் அனைவரும் கூடி ரப்பானியை வெளியே கொண்டு வந்தனர். அவரது முகத்தைப் பார்த்த அன்பழகனுக்கு பேரதிர்ச்சி. ரப்பானிக்கு, தனது வீட்டில் என்ன வேலை என்று குழம்பிய அவர் மகாலட்சுமியிடம் விசாரித்தார். உண்மையைக் கொட்டினார் மகாலட்சுமி. இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

 அங்கு போன பின்னர் தனது கணவனுடன் வாழ மாட்டேன், ரப்பானியுடன்தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார் மகாலட்சுமி. ஆனால் அதற்கு முன்பே ஒரு முடிவுக்கு வந்து விட்ட அன்பழகன், கணவனையும், கைக்குழந்தையையும் மனதில் கொள்ளாமல் காம வெறி பிடித்து கள்ள உறவை நாடிய மனைவி தனக்கு வேண்டாம் என்று கூறி காவல் நிலையத்தில் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டு கைக்குழந்தையுடன் வீடு திரும்பி விட்டார். 

ரப்பானியிடம், மகாலட்சுமியுடன் குடும்பம் நடத்தத் தயாரா என்று போலீஸார் கேட்டபோது அவர் சரி என்று கூறினார். இதையடுத்து இருவரையும் அங்கிருந்து போலீஸார் அனுப்பி வைத்து விட்டனர்.