அவுரங்காபாத்:மாநகராட்சிக்கு சொந்தமான ஏக்நாத்நகரில் உள்ள
பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சுரேஷ் வாகுலே. இவர் அந்த பள்ளிக்கூடத்தில் படித்து வந்த 12 வயது மாணவியை மிரட்டி கற்பழித்து உள்ளார். இதை யாரிடமும் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்து உள்ளார்.இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் சுரேஷ் வாகுலேயை கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.