திருகோணமலையில் மதுபானம் அருந்திவிட்டு காதலன் காதலியைத் தாக்கல் !




திருகோணமலையில் மதுபானம் அருந்திவிட்டு காதலன் காதலியைத் தாக்கி காயமேற்படுத்திய ஒருவரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே இன்று வியாழக்கிழமை (7) உத்தரவிட்டுள்ளார்.                            

திருகோணமலை சுகதகம பகுதியைச் சேர்ந்த கே.பி.தாரக்க கசுன் வயது(26)என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                           

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியின் நீண்டகாலமாக காதலித்து வந்த பெண்ணொருவரை சாரயம் குடித்து விட்டு குறித்த பெண்ணின் வீட்டுக்குச் புதன் கிழமை (6)இரவு சென்று தாக்கி காயமேற்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.        குறித்த பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அப் பெண் வேறு ஒரு நபரை காதலித்து வருவதாக அறிந்த ஆத்திரத்தில் காதலன் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                           

குறித்த சந்தேக நபரை பொலிஸார் புதன்கிழமை(6)இரவு கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றிய மேலதிக. விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.