மதுவிலக்கு...இல்லையேல் கருணைக் கொலை! பரபரப்பை கிளப்பும் பெண்ணின் மனு

பூரண மதுவிலக்கை அமல்படுத்தாவிடில் என்னை கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள் என முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் கலைச்செல்வி என்பவர் முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், கடந்த பல ஆண்டுகாலமாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி தமிழக பெண்களாகிய நாங்கள் காந்தியவழியில் போரடி வருகிறோம். மதுவால் பல குடும்ப பெண்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலை மாற வரும் 26ம் திகதி குடியரசு தினத்தன்று பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்.

 இல்லையெனில் 27.01.2016 அன்று கலைச்செல்வியாகிய என்னை மதுவிலக்கிற்காக கருணை கொலை செய்ய உத்திரவிட வேண்டி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கம் பல ஆண்டுகளாக மதுவிலக்குக்கு எதிராக போராடி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு இயக்கங்களும் பூரண மதுவிலக்கு கோரி பல போராட்டங்களை நடத்தி வருகின்றன.

 ஆனாலும், தமிழக அரசு டாஸ்மாக் வருமானத்தையே பெரிதும் நம்பியுள்ளதால் மதுவிலக்கை அமல்படுத்தும் நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில் தற்போது இவரின் இந்த அதிரடி மனு பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.