யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவி சற்றுமுன் இனந்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவி சற்று முன் இனந்தெரியாத இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 யாழ் பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற இத் தாக்குதலில் மாணவி அப்பகுதியில் டெனிம் மற்றும் ரீசேட்டுடன் சென்று கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. மாணவி பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து உடனடியாக அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

 வெள்ளிக் கிழமைகளில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கலாச்சார ஆடை அணிந்து வருவது ஆமுலாக்கப்பட்டபின் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கலாச்சார ஆடை அணிவதை குழப்புவதற்காக விசமிகள் மேற்கொண்ட நடவடிக்கையாக இது இருக்கலாம் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கள மாணவர்கள் சிலரே இவ்வாறு தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.